பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aாடல்கள் 123 கோழை வட்டமிடும் புருப் போலே இருகண் பார்வை வாள்கொண்டு சுழற்றியவள் வருமப் போது திட்டமிடும் அவளுள்ளம் புரிந்தி ருந்தும் திருடன்போல் விழித்தபடி நின்றிருப்பேன்! கட்டிலறை நினைவு வரும் அவளை யங்கே காணுமொரு நாளையெண்ணி உள்ளம் வாடும். பட்டதெல்லாம் வெளிப்படுத்தும் பான்மை யின்றிப் பாடுபடும் நாளுெருவன் கோழை யன்ருே? பளிச்சென்ற மின்னலைப்போல் புன்சிரிப்பாம் படைகொண்டு வளைத்தபடி வருமப் போது களிக்கின்ற அவளுள்ளம் புரிந்திருந்தும் கலங்கிப்போய் விழித்தபடி நின்றிருப்பேன்! வெறிச்சென்ற என்வீட்டில் ஒளிசெய் கின்ற விளக்கேற்ற அவள்வருமோர் நாளை பெண்ணிக் கிளர்ச்சிபெறும் எண்னத்தை வெளிப் படுத்தக் கிஞ்சித்தும் உறுதியில்லேன் கோழை யன்ருே? பொற்சிலைபோல் உடல்கொண்டு பவழ வாயில் புன்சிரிப்பைத் தேக்கிவைத்து மலர்க்கண் ணுலே கற்பனையைக் கிளறிவிட்டுக் காதல் தூவும் கட்டழகி தனக்கண்டு மெய்டி றப்பேன்! அற்புதமாய் அவளுடனே கூடி யின்பம் அடைவதற்கே என்னுள்ளம் ஆசை கொள்ளும்! சொற்படுத்திக் கருத்துரைக்கத் துணிவில் லாமல் சோர்ந்திருக்கும் நானுமொரு கோழை யன்ருே?