பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நாச்சியப்பன் பயனில்லாத ஆசை அன்ன தடை மின்னலிடை வண்ணப் பூவின் அழகுடைய திருமேனி மேகக் கூந்தல் பின்னலிலே பூக்காட்டை வண்டு மொய்க்கும் பெண்ணுெருத்தி தனைக்கண்டு மயங்கி நின்றேன்! அன்னவள்தான் நம்தோழர் அழகு நம்பி - அகமுடையாள் என்றுரைத்தான் அன்புத் தோழன். என்னெஞ்சம் நாணிற்றுத் தலைகுணிந்தேன் என்செய்வேன் பிழைசெய்தேன் என்செய்வேனே! கொஞ்சுமொழி பேசியொரு கோதை வந்தாள் கொடுப்பீரோ புத்தகத்தை என்று கேட்டாள் நெஞ்சமெல்லாம் மகிழ்வெய்தக் கொடுத்து விட்டேன் நேசித்தேன் அவளழகில் மயங்கி நின்றேன் வஞ்சமில்லாப் பேச்சுடையாள் திரும்பி வந்தாள் வடிவேலன் நலங்கேட்டு மகிழ்ந்து சென்ருள். நெஞ்சமெல்லாம் நாணிற்றுத் தலை குனிந்தேன் நேர்மையில்லாக் காதல்கொண்டேன் என்செய்வேனே! பாலுக்குச் சீனியைப்போல் தமிழன் பாடும் பாட்டுக்கு நயத்தைப் போல் அடிசிவந்த காலுக்குச் சிலம்பணிந்த கன்னி நல்லாள் கட்டழகுக் கிலக்கியமாய் வந்து நின்ருள்! சேலுக்குத் தானிகர்த்த கண்ணே என்பால் செருகிடுவாள் காதலிப்பாள் என்ற வென்றன் மாலுக்குச் சற்றுமவள் மதிப்பளிக்க மனமின்றிப் போய்விட்டாள் என் செய்வேனே!