பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பெசல்லாப்புச் சேர்க்காதே கோடி வீட்டினில் இருப்பவன் அந்தக் குறும்புக் கார னுடனேநீ ஒடித் திரிவதும் ஆடி மகிழ்வதும் கண்டிந்த ஊரே சிரிக்குதடி. தேடி யலைந்தாலும் கிடைப்ப தில்லையொரு மாப்பிள்ளே இந்தக் காலத்திலே போடி உன்றனைக் கட்டிக் கொடுக்குமுன் பொல்லாப்புச் சேர்க்காதே வீட்டினுக்கே! மாடியில் நின்றவன் கூவி யழைப்பதும் மற்றங்கு நீயொரு சிட்டுப் போல் ஒடிப் பறப்பதும் கூடிக் களிப்பதும் கண்டிந்த ஊரே சிரிக்குதடி! வேடிக்கை யல்லடி நாளைக்கொரு மாப்பிள்ளை வேண்டும்பொன் அள்ளிக் கொடுத்தாலும் நாடிட மாட்டான் உன்னேயே யிது நற்செயல் அல்லடி விட்டிடுவாய்! வாடிக்கை யாக நீர்த்துறை செல்லும் போக்குக் காட்டியவன் வீட்டினுள்ளே ஒடிக்கை கொட்டிக் குதிப்பது மாடலும் கண்டிந்த ஊரே சிரிக்குதடி! கோடிக்கணக் காய்ப்பணத்தை பள்ளிப் போய்க் கொட்டினும் நம் குலத்தி னுள்ளே தேடிக்கை பிடிக்க ஒருமாப் பிள்ளை கிடைப்ப தரிதடி விட்டிடுவாய்! 125