பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 127 பாடல்கள் புதுக் கூட்டு மாமரச் சோலையில் ஒருபுறத்தில்-ஒரு மானென ஒடினள் பெண் ளுெருத்தி காமர் உலகத்தின் தெய்வமதோ-பெரும் களிப்புக் கடலின் திரட்சிகொலோ? ஆமிந்தப் பெண்ணென யோசித்தனன்-அவன் அவளை நெருங்கவும் அஞ்சி நின்ருன். தேமதுரக் கணிகள் பொறுக்கி-அந்தத் தேன் குழல் ஓடினள் இங்குமங்கும். நெஞ்சில் எழுந்திடு மாசையினல்-அந்த நேரிழை யாளெதிர் சென்று நின்ருன் வஞ்சன யில்லாத அன்னவளும்-மெல்ல வளைந்த உடல்தான் நிமிர்ந்திடவே அஞ்சினள் பார்த்ததும் பின்னடைந்து-சற்று யாரெனப் பார்த்தனள் கண்களினல் கெஞ்சியே நின்றிடும் கண்களுடன்-அந்தக் கெண்டை விழிகள் கலந்தனவாம்! சமய மறிந்தனன் மெல்ல மெல்ல-அந்தத் தங்கத் தெதிரில் நெருங்கிவந்தான் அமர்ந்தனன் பக்க மரத்தடியில்-பொன்னின் அணங்கவள் நின்றனள் கல்லினைப் போல் அமைதியில் லாத அவள்முகத்தைக்-கண்ட அவனங்குச் சொல்லிய சொற் களிவை: சமைந்த உனதின்பப் பொன்னுடலை-அடி தத்தமாய்த் தந்திடச் சம்மதமோ?