பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தாச்சியப்பன் என்ன கவலையில் ஆழ்ந்து விட்டாய்-அடி இந்தச் சமயம் தவறிவிட்டால் என்னடி செய்வேன் உனக்கெனக்கு-நேரம் இனிஎப் பொழுதில் அமைந்திடுமோ? என்ற உரைகள் செவி வழியே-தனது இதயத்தில் ஏறிடத் தண்டமிழில் கன்னல் நிகர்த்திடும் சொற்களினல்-அந்தக் கன்னி மொழிந்தனள் நெஞ்சகத்தால்! முன்னர் ஒருவன் எனக்கலந்து-மணக்கும் முன்னம் எனவிட்டு நீங்கிவிட்டான் பின்னர் ஒரு நல்ல பிள்ளையினை-நான் பெற்றது கண்டென்னைப் பெற்றவரும் என்னைத் துரத்தியிக் காட்டினிலே-திரும்ப இனிவரா தேயெனச் சொல்லிவிட்டார் அன்னவன் செய்தஓர் சூழ்ச்சியினல்-நான் ஆற்றற் கருந்துயர்ப் பட்டேனயா! தத்தமாய்த் தந்திடச் சொல்லுகின்றீர்-ஆனல் தக்க சமயம் அமைந்த தென்றீர் . வித்தகம் பேசிநீர் என்மனத்தை-இன்று வினய்க் கெடுப்பது மாகுவதோ? எத்துக்கள் செய்தென வஞ்சகத்தால்-நீர் இப்படிக் கொள்ளுதல் நல்லதுவோ? சற்றிதைச் சொல்லி விளக்குவிரேல்-நான் சம்மதச் செய்தி யுரைத்திடுவேன்!