பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ié நாச்சியப்பன் தேவையுள்ள போதெல்லாம் வேறு வேறு தேடுகின்றார் சில தலைவர் இந்த நாளில்! காவியத்து நாயகரின் மேன்மை பற்றிக் கழகத்துக் கூட்டத்தும், பத்தி ரிக்கை ஒவியத்தும் காண்பதன்றித் தலைவர் என்போர் உள்ளத்தில் நடைமுறையில் காணற் கில்லை. (178) என இன்றைய தலைவர்தம் இயல்புகளை அங்கைக் கனியாக்கும் போது ஆகா என வியந்து வாழ்க துணிவு' எனப் பாராட்டத் தோன்றுகிறது. பொங்கலைப் போற்றிப் பாடும் பாவலர், தீபாவளியைக் கண்டித்துப் பாடும் பாடல்களையும் காண்கின்றோம். பொருந்தா மணத்தைக் கடிந்தும் கைம்பெண் மணத்தை வரவேற்றும் பாடுகின்றார். காற்றையும் தீயையும் தன்வச Lorri 6)& காட்டினார் மேலை நாட்டினோர்-திரு நீற்றையும் மண்ணையும் குழைத்து நெற்றியில் திட்டினார் நமது நாட்டிலே! (243) எனும் ஒப்பீடு பாவலரின் பகுத்தறிவுப் பார்வையைப் புலப்படுத்தும். நாள்தோறும் நாம் கண்டு வரும் பிச்சைக்காரர்களின் தொல்லையும் பாடலாகின்றது. ஊருக்கொரு பிச்சைக்காரர் விடுதிவேனுங்க-அங்கே ஊமைசெவிடு குருடையெல்லாம் சேர்க்க வேணுகே ஊருநடுவே பிச்சைகேட்டால் பிடிக்க வேணுங்க-அவரை உடனே அங்கே கொண்டுபோயி அடைக்க வேணுங்க! (260) எனச் செயல் திட்டமும் வழங்கப்படுகின்றது. எதையெதை யோ பெறவேண்டுமென்று பிற நாடுகளுக்குச் சென்று, உழைப்பால் அந்நாடுகளை உயர்த்தி, ஏதிலிகளாகத்