பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 129 இந்த மொழிகளைக் கேட்டிருந்தான்-அந்த இளைஞன் உளத்தெழும் காதலினல் சிந்தையில் எண்ணிய தீக்குணத்தை-அவன் சிந்தித் துணர்ந்து பின் சொல்லுகின்ருன்: 'எந்தைக்கு நானஞ்சிச் சொல்லிவிட்டேன்-அதை இனியோ நினைப்பது மில்லைகண்டாய் வந்திங் கெரிகிற காதலினை-அடி வஞ்சி யணைக்கநீ வாடி'யென்ருன்! வாடி யறியா மதத்தலைவர்-பெரும் வாயை நெருங்கும் உணவதைப் போல் முடி யிருந்த முகந்திறக்கும்-மலர் முகத்தைத் தழுவும் கதிரினைப் போல் ஒடிப் பறந்தனள் தாவியவன்.-நன்று ஒட்டித் தழுவினன் அன்னவளே! கூடிக் கலந்தனர் ஆவியொடும்-ஒரு கூட்டுக்குள் ளாயினர் வாழியவே!