பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நாச்சியப்பன் தேடற் கரிய திரு சிந்தையுறையும் திருவினை என்காதலியை இந்த உலகத்தில் இன்பத்தைத்-தந்தெனக்குப் பல்காலும் அன்பிற் பலசொற் குழைத்துாட்டி வெல்லங் கசக்க விளைந்தசிறு-முல்லைகள் தம்மை வரிசையுறத் தந்தம்போற் காட்டி. ஒளி மின்ன விளங்கி என்றும் மின்னிமின்னி-என்னுளத்தைக் கொள்ளை கொண் டாளேயான் காணும் குறிக்கோளால் வெள்ளை யுடுத்தி விரைந்தேன்என்-உள்ளத்தில் பைந்தொடியாட் கென்ன பரிசளிப்ப் தென்ற்ேதான் சிந்தித்தேன் அப்பரிசும் சீரியதாய்-இந்தத் தினம்வரைக்கும் இல்லாத் திருவுடைத்தாய், என்றன் மனம் விளக்கும் செவ்வைத்தாய், மாதின்-இனிய முகத்தை மலர்வித்து வாய்முத் துதிர்த்தே அகத்துற்ற செம்மை அதரந்-திகழ்விக்கும் புத்தம் புதுப்பொருளாய் வேண்டும் பொலிவுடனே சித்தங் கவர்ந்தந்தச் சேயிழையாள்-மெத்த வியந்தென்னைக் கண்டு விளையாடி, இன்பம் பயந்தென்றன் உள்ளம் பருகி-நயவுரைகள் பன்னுாறு சொல்லிப் பயின்றிடவும் வேண்டுமிதற் கென்ன பொருள் நல்லதென எண்ணினேன்-சின்ன ஒரு பூக்கொண்டு போவமெனில் புன்னகையால் அவ்வழகை மேய்க்கின்ற கன்னமுண்டே மின்னளுக்கு-ஆக்கம் தருங்கனிகள் ஆமோ தருதற் கெனில் அவ் விருகனியும் வாயாங்கொவ் வையும்-கருத்துறவும் பாலாமோ வென்று பலநினைக்கக் கூர்மையுறு வேலாற்கண் கள்படைத்தாள் விந்தைமொழி-தோலாது பாற்கென்றே சிந்தை பகர்ந்திடவும், பின்னுமவள் மேற்கருத்துச் சென்று மினுமினுக்கும்-மேற்கொண்டு யாதும் நினைவின்றி அடைந்தேன்.அச் சோலையினை மாதவளும், 'அத்தான் மனமிலையோ?-ஒதும்' என ஒடி வந்தாள் யானுணர்ந்தேன் உள்ளமெனும் ஒன்றேதான் தேடற் கரிய திரு.