பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 131 இரவின் விரைவு நீலநிற வானில் நிலவெரிக்கும்; அப்பம் போல் கோலமுழு துங்காட்டிக் கொண்டிருக்கும்-சாலவும்என் உள்ளம் உவகையிலே துள்ளிற்று. யான்ஓடி மெள்ளப் படியேறி மேற்சென்று-வெள்ளம்போல் கொட்டி, அழகைக் குவிக்கும்.நிலா முற்றத்தைக் கிட்டினேன். இன்பம் கிளர்ந்தது. பின்-கொட்டினேன் இன்பத் தமிழில் இசைப்பாடல் பற்பலவாய்! மின்னிற்று வான் உள்ளம் மேவிற்றே-என்னென்று காண உடனே கமழிசையைக் கட்டிவைத்துச் சேணில் விழிநோக்கைச் சிந்தினேன்-பேண வந்த பெண்ணழகொன் றங்குப் பெருமின்னல் போற்ருேன்றிக் கண்ணிழுத்துப் பின்என் கருத்திழுத்துக்-கொண்ட திறத்தினையான் என்னென்பேன் சீரெல்லாம் ஒன்ருய்த் திரண்டதுவோ! பெண்ணழகின் சேர்க்கைத் - திறமிதுவோ எள்றெல்லாம் எண்ணிற்றே எண்ணம். இசைகேட்ட கன்ருேடி, மேய்க்கும் சுருப்பனிடம்-சென்றிருந்த பான்மைபோல் யானந்தப் பாவை யிருந்தமுற்றம் தானெதுவென் முய்ந்து தனி நடந்தேன்-நான் சென்று தாழ்தட்ட எண்ணுங்கால் தான்வந்து சின்ன நகை யாழிசைத்து, வாரீர் அடிமை என்றன்-பாழ்மனையில் செல்வங் கொழிக்கவந்த சீராளா ! என்றன்னுள் வெல்ல மொழிகுழைந்து 'வேந்தேஎன்-இல்லுள் வரு'கென்ருள். சென்றேன்பெண் இன்ப வளத்தைப் பருகென்ருள் அவளள்ளிப் பாயில்-உருவைத்தாள் கன்னத்தில் தேன்வைத்தாள், கள்ளின் வெறி வைத்தாள். என் னுள்ளத் தை வைத்தே யானிருக்கும்-இந்நிலையில் பொன்னை நல்லிரவு போம் விரை(வு)இன் னப்பொறுக்க என்னல் இயலா(து) இனி!