பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் $33 தலைவன் தலைவிக்கு பொழுதித் தளை நீ பொறுத்திருந்தாய் சற்றே அழாதிருப் பாய் என் அணங்கே! வெளுத்தந்தத் திங்கள் வருமுன்னர் நான் வந்து சேர்கின்றேன் உன்கண் விருந்துக் (கு) உவந்து! விரிதாள் கண் ணுற்றேன் விழைவ தறிந்தேன் இருப்பாய்! பொறுப்பாய்! இதோ நான் விரித்தேன் சிறகைப் பறந்தேன் விரைந்தே நறுந்தேன் உறவே வருவேன் உணர்! அவளைப் பார்த்தேன் அவளைப் பார்த்தேன்-அவள் அழகைப் பார்த்தேன்-நான் ஆசை கொண்டேனே! பூவைப் பார்த்தாள்-செம் பொட்டைப் பார்த்தாள்-மஞ்சள் பொடியைப் பார்த்தாளே! இயற்கை யான-நல் எழிலைக் கொண்டும்-அவளுக்கு ஏனே நிறைவில்லை? செயற்கை யழகை-அவள் தேடிக் கொண்டாள்-இதில் சேர்ந்த பயனென்ன?