பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நாச்சியப்பன் ஒரப் பார்வை சொல்லடி தோழி-மெய்யாய்ச் சொல்லடி தோழி! இல்லை என் ருலும் விடவே மாட்டேன் நீ எதையும் மறைக்காதே என்னிடம் சொல்லடி தோழி! வெல்லத்தை யள்ளி விழுங்க நினைப்பவர் போலே-அந்த விந்தை மனிதர் உன்னைப் பார்த்திடும் போதே. மெல்னத் திரும்பிநீ ஒரக் கண்ணினலே மெய்புள காங்கித மடையப் பார்த்தனை யல்லவோ? சொல்லடி தோழி! பழுத்த களியைக் கண்டுகிளி பறப்பது போலே-அவர் பார்வை வெள்ளம் உன்மீது பாய்ந்திடும் போதே அழுத்த மாகப் பிறர் அறியாத வாறே அஞ்சுகமேநீ மெல்லப் பார்த்தனை யல்லவோ? சொல்லடி தோழி! பத்துநாள் பசித்தவன் பிடிச்சோறு கண்டது போலே-அவர் பறக்கும் உணர்ச்சியால் உன்னைப் பார்த்திடும் போதே மெத்தப் படித்தோர் அலட்சியப் பார்வையைப் போலே மெல்லப் பிறர்அறி யாமலே பார்த்தனை யல்லவோ? சொல்லடி தோழி! செக்கச் சிவந்த தாமரைக் கண்களினலே-இளஞ் சிங்கத்தை யொத்தவர் உன்னைப் பார்த்திடும் போதே மிக்க மருண்டவோர் புள்ளி மானினேப் போலே விளங்கிலுைம் மெல்லவே பார்த்தனை யல்லவோ? சொல்லடி தோழி! வெட்கப் பட்டே என்னிடம் மறைத்து விடாதே-அந்த வீரரை யடையத் துணைசெய்வேனடி நானே! தக்க சமயம் அறிந்துவந்தே சொல்லிடுவேனே தந்திரமாகவே தூதுபோய் வருவேன் அல்லவோ? - - சொல்லடி தோழி!