பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 137 காதலர் நினைவு அவர் வருவாரடி-தினந்தினம் அவர் வருவாரடி பாய்ச்சுகை வேலொடும் பாகைத் தலை யோடும் பேச்சுச் சுவை தந்திடப் . பேராவல் தள்ளி வர அவர் வருவாரடி! வீசி வருங்கையில் விளங்கும் மலரினை ஆசை யுடன் அவர் அணியும் போதினில் கூசித் திரும்பினால் கொட்டிடும் கையுடன் அவர் வருவாரடி! மெள்ள வருவர் என் மேனி யழகினே அள்ளிப் பருகுவர் ஆசைத் தணலிலே தள்ளி விடுத்துப்பின் தாங்கி நடந்திட அவர் வருவாரடி! கொள்ளை யிடும்விழி கொஞ்சும் அவர் மொழி கள்ளை நிகர்க்கும் என் காதல் மனத்தினில் வெள்ளம்போ லின்பம் அள்ளித் தரத்தினம் அவர் வருவாரடி!