பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நாச்சியப்பன் அழகி அழகு அழகு தான்-அவள் அங்க மெல்லாம் தங்கம் தான்! விழி இரண்டும் வாளைப் போலவே சுழற்றி வீசி மருண்டு நோக்குவாள்! அழகு அழகுதான்! எழுந்து தோழி தோளைத் தழுவுவாள்-என்றன் இரண்டு தோளும் வாடிப் புழுங்குமாம்! குழந்தை போலே பேசிக் கொஞ்சுவாள்-இரு கோல வளைக்கை வீசிச் செல்லுவாள்! அழகு அழகு த ரன் ! உதட்டில் சின்னச் சிரிப்பைத் தேக்குவாள்-என் உயிரை வாங்கும் கண்ணுல் நோக்குவாள்! பதட்டப் பட்டங் கெழுந்து செல்லுவேன்-திரும்பிப் பார்க்காமல் மேல் நடந்து செல்லுவாள் அழகு அழகுதான் !