பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் l? திரும்பிவரும் தமிழர்களை நோக்கிப் பெற்ற தாய்நாட்டை விட்டுப் பிற நாட்டுக்கேன் போனாய்? என்று வினா எழுப்பிப் பாவலர் வடிக்கும் கண்ணிர் (261) அவர்தம் பட்டறிவையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது போலும்; சிறுகதைக்கும், நெடுங்கதைக்கும் என்ன வேறுபாடு? அடுத்தடுத்து வாழ்க்கையிலே தொடரும் சிக்கல் அத்தனையும் வகைப்படுத்திப் பிரித்தெடுத்துத் தொகுத்துரைக்கும் ஆற்றலினால் உண்மை வெல்லச் சொல்லுகின்ற பாங்கிருக்கும் பெருங்கதையில்; விடுத்ததொரு கவண்கல்லில் மோதிக் கீழே விழுகின்ற கனிச்சுவையைத் துய்த்தல் போலே எடுத்ததொரு கற்பனையின் திறத்தி னாலே - இசைப்பதுதான் சிறுகதையின் ஆற்றலாகும் (267) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இவ்வரையறை, நூற்பாவைப் போல் அமைந்துள்ளதன்றோ? கதைஞர்கள் எத்தகு கதைகளை எழுத வேண்டும், எத்தகைய கதைகளை எழுதக் கூடாது என்பதற்கு விளக்கமாக, ஆடைகுறைக் கின்ற கதை வேண்டாம்; நல்ல அறிவுவளர்க் கின்றகதை படைத்தல் வேண்டும்! வாடைமதுக் குடிக்கதைகள் வேண்டாம்; தூய்மை வளர்க்கின்ற சிறுகதைகள் வரைதல் வேண்டும்! பீடைமதஞ் சாதிகதை வேண்டாம்; அன்பு பெருக்குகின்ற திருக்கதைகள் மிகுதல் வேண்டும்! மேடையிலே வீசகின்ற பூங்காற் றைப்போல் மிகவினிய சிறுகதைகள் படைப்போம் வாரீர்! (259) எனும் பாடல் அமைகின்றது. நூல் வெளியீடு பற்றியும், பதிப்பாளர் பற்றியும் பேசுகிற பாடல்களும் பொருட் செறிவோடு அமைந்துள்ளன. —B