பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 139 பேடன்னம் பேடன்னம் போகுததோ பார் பின்னிய குழற் பேடன்னம் போகுததோ பார்! தேனே குடித்து வண்டு திளைத்துப் பாட்டிசைக்கத் தென்றல் வந்து வந்தவள் தேன் குழல் அசைக்கப் பேடன்னம் போகுததோ பார்! மெல்லத் துவளும் சின்ன இடையே மேலிற் புரளும் வண்ணச் சேலை தன்னை யிழுக்கத் தாவுங் கையே தாளஞ் சிலம்பு காலிற் போடப் பேடன்னம் போகுததோ பார்! புருவ வில்லிற் புறப்பட் டம்பாய்ப் பொங்கொலி பாயும் கண்கள் இளைஞர் கருதக் கருதத் திரும்பி வந்தே கலக்கி மனத்தை யுலுக்கும் படியே பேடன்னம் போதுததோ பார்! சாய்ந்த குழலிற் ருழம் பூவும் சருக்கி வீழக் காத்திருக்க வாய்ந்த இளைஞர் ஒழுக்கம் அங்கே வழுக்கி வீழக் காத்திருக்கப் பேடன்னம் போகுததோ பார்!