பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 143 முகம் மறைத்தாள் வாச மலர்ச் சோலையிலே-கதிர் சாயும் அந்தி நேரத்திலே ஆசை முல்லைப் பூப்பறிக்கும்-ஒர் அழகு மலர்க் கொடி கண்டேன் வீசும் எழில் தாமரையோ-என வியந்து முகம் பார்த்திருந்தேன் கூசி மலர்க்கண் மறைத்தாள்-கருங் கூத்தலையே காட்டி நின்ருள். மாடு கன்று தேடிவரக்-கதிர் மறையும் அந்தி நேரத்திலே ஆடு கின்ற பூங்கொடிபோல்-எதிர் அசைந்து வரும் தேரினைப் போல் பாடுகின்ற தேன் மொழியாள்-எதிர்ப் பாங்கில் வரக் கண்டு நின்தேன் முடுகின்ற கைமலரால்-எழில் முக மலரை மறைத்து விட்டாள்!