பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நாச்சியப்பன் காதல் கவர்ச்சி தோழனே அவள் யாரடா?-பசுந் தோகை மயிலோ பாரடா! கானில் வளர்ந்த மடப்பிணையோ-பூங் காவில் படர்ந்த மலர்க் கொடியோ தேனில் கிடந்த கனியமுதோ-கலைத் தேரில் உலவுந் திருவடிவோ? காணக் காணவே கவர்ச்சியடா-அவள் கண்களில் என்ன மலர்ச்சியடா பூணத் தகுந்த மாலையடா-அவள் புன்னகை கண்டுளம் துள்ளுதடா! வேலினப் போலிரு விழிகளுமே-மிக வேகமாய்ப் பாயுதென் நெஞ்சினிலே பாலின நிகர்த்த மொழிபேசி-இன்பம் பாய்ச்சுவளோ துயர் நீக்குவளோ? வெண்ணில வொத்த முகத்தினிலே-முல்லை விரிந்தது போல்நகை கூட்டினளே பண்ணிகர் மொழியில் பேசுவளோ-கண் பார்வையிலே பதில் கூறுவளோ? நெஞ்சினில் ஆசை யூறுதே-என் நினைப்பும் அளவினை மீறுதே வஞ்சி என்நிலை அறிவாளோ-இன்ப வாழ்வு தரவே வருவாளோ?