பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் i45 இணைப் பாடல் கோவை யிதழைக் கொஞ்ச வந்தேன் ஆரணங்கே-செல்வக் கோமகளை நான் கெஞ்சு கின்றேன் பார ணங்கே! பட்டத் தரசர் பாவையைப் போய்க் கெஞ்சுவானேன்-கண் பார்வைக் குள்ளே பாவை யுள்ளம் தஞ்ச மாமே! தேனும் பாலும் கலந்த சொல்லேக் கேட்ட தாலே-மதுத் தேடும் வண்டு போலே வந்தேன் ஊட்டு வாயே! தேனு மில்லை பாலு மில்லை இங்கு வந்தால்-சற்றும் தெவிட்டாத இன்ப முண்டு பங்கு கொள்வீர்! நீயும் நானும் நிலவும் வானும் காதலியே-இனி நிழலப் போலே தொடகு மின்பம் காதலியே! நா-10