பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாச்சியப்பன் பம்பாயில் வீசிய புயல் பற்றியும் (236), வங்கப்போரில் பெற்ற வெற்றி பற்றியும் (271) பாடியிருப்பது பாவலர்தம் பார்வை விரிவைக் காட்டுவதாம். ஆங்கிலப் பாடல்களைத் தழுவி இயற்றப்பட்ட சில எளிய பாடல்களும் (94, 106, 256) இடம் பெற்றுள்ளன. பொருளைத் தெளிவாகப் புலப்படுத்தவும், பொலிவு சேர்க்கவும் உவமைகள் பயன்படுகின்றன. பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக் கேங்குதல்போல் (3) "ஏட்டிலே புதுமை சேர்க்கும் - எழுத்தாளர் செயலைப் போலே” - (57) "பச்சைக் குழந்தை பளபளக்கும் தேன் முகத்தில் மச்சமிட்டு வைத்து மருவாக்கும் தன்மையென (209) இவை, பானைச் சோற்றுக்குப் பருக்கைப் பதமாகச் சுட்டப் பெறும் சில புத்துவமைகள்! நூலுள் நுழைந்து பாருங்கள்! மேலும் உவமைகள் மின்னிடும்! தவளையின் சொர்க்கம்", (258) பொய் மகள்' (263) போன்ற கவிதைகள் பாவலரின் உருவகத் திறனைக் காட்டும் நெற்றித்திலகங்கள். வேற்றுப் பொருள் வைப்பணி, (3) சொற்பொருள் பின்வரு நிலையணி போன்றவை நூலின் பல இடங்களில் அணி செய்கின்றன. ஒத்திருக்கும் இளம்பருவம் காதல் நெஞ்சம் உடையவர்கள் மணமக்கள் என்றால் அன்பு வைத்திருக்கும் மனத்தின்பம் வளர்ந்தி ருக்கும் வாழ்க்கையிலேநிலைத்திருக்கும் ஒருமை யென்னம் சத்திருக்கும் பழம்போலே; உரமி ருந்தால் தழைத்திருக்கும் செடிபோலே இல்ல றத்தில் ஒத்திருக்கும் மனப்பான்மை குடியி ருந்தால் - உயர்ந்திருக்கும்குடித்தனமும்! வாழ்க்கை வெல்லும் (166)