பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 151 ஒருமுறை கண்ட தீருமுகம் ஒருமுறை தான்.அவள் திருமுகம் கண்டேன்! எனினும் அவளேயே நான் உயிரினுக் குயிரெனக் காதலிக் கின்றேன்! உயிருள்ள வரையிலும் காதலிப் பேனே! திருமகள் போலவள் தெருவில் நடந்தாள் இருவிழி குளிர்ந்திட ஒருமுறை கண்டேன்! ஒருமுறை தான் அவள் திருமுகம் கண்டேன்! திருவடித் தாமரை அசைந்தது! அன்னம் தெருவில் நடந்தது போலிருந் ததுவே! இருவிழித் தாமரை அசைந்தன: உள்ளம் ஈர்த்தன! தம்வயம் ஆக்கிவிட் டனவே! ஒருமுறை தான்.அவள் திருமுகம் கண்டேன்! பவளமென் உதடுகள் திறந்தன! முல்லைப் பற்களின் இன்னுெளி பாய்ந்தது கண்டேன்! அவள்திரு வாயினின் றுதிர்ந்தது தேன்.மழை! அதுதான் யாழோ குழலோ அறியேன்! ஒருமுறை தான் அவள் திருமுகம் கண்டேன்! தெருவினைக் கடந்தவள் சென்றுவிட் டாளே! தெய்வநல் லுலகமே சேர்ந்துவிட் டாளோ? திருமகள் எவ்விடம் சென்றன ளேனும் சிந்தையில் ஒவியம் ஆகிவிட் டாளே! ஒருமுறை தான் அவள் திருமுகம் கண்டேன்!