பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தாச்சியப்பன் பிறர் தோட்டத்துப் பூ சின்னஞ் சிறிய வயதினிலே-பள்ளி செல்லும் வழியில் ஒருசிறுமி தின்னும் வடையில் மனம் வைத்தேன்-உள்ளத் தேவைக் கதனைப் பறித்து விட்டேன். பின்னும் ஒருநாள் வீதியிலே-அழகு பெற்ற பதுமை தூக்கிவந்தாள் தன்னை மறந்தே சிறுமியினைக்-கையால் தாக்கிப் பதுமை துக்கி வந்தேன்! கொஞ்சம் வயது சென்றவுடன்-எழில் கூடும் பருவம் வந்தவுடன் வஞ்சி யவளைப் பதுமையென-எதிர் வைத்துச் சிரித்து விளையாட நெஞ்சந் துடித்திட்ட தென்ருலும்-அந்த நேரத்தில் பாவையைத் து.ாக்கிவரக் கொஞ்சமும் வன்மை சேரவில்லை-இந்தக் கோழை யுள்ளத்தில் வீரமில்லை!