பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 153 காட்டு மல்லிகை என்னிலதை-நான் கைப்பற்றிக் கொள்ளல் எளிதாகும்-பிறர் தோட்டத்துப் பூவைப் பறித்துவந்தால்-மிகத் தொல்லை யடைந்திட நேருமன்ருே? கூட்டுக் கிளியினைப் போல வளை-மிகக் கொஞ்சி வளர்த்திட்ட பெற்ருேரே வீட்டில் அடைத்தவர் எழில் மறைத்தார்-இங்கு வேதனை கொண்டுநான் வாடுகின்றேன். மீசை திருகி நடக்கவில்லை-அந்த மின்னலைத் தாக்கிடும் எண்ணமில்லை. ஒசைப் படாமலே கொல்லைவழி-அவள் ஒடி வருவதை யெண்ணி யெண்ணி ஆசைப் பட்டிங்கு வாடுகின்றேன்-அவள் அருட்கண் பார்வையை நாடுகின்றேன். பாசங் கொண்டேன் இச்செய்தியினை-அந்தப் பாவைக் குரைத்திட வேண்டுமடா!