பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நாச்சியப்பன் கன்னஞ் சிவக்கக் கணிகையிட்ட முத்தம் காதல் வடிய அப் பாவையிட்ட முத்தம் இன்னும் மனத்தைவிட் டேகவில்லை முத்தம் என்றும் பெறுதற் கெனக்கினிமேல் சித்தம் வாயின் அமுதம் வடித்தெடுத்தே என்றன் வரிமீசை தன்னைப் பெரிதொதுக்கி மெல்லத் தோயும் மதுவெனச் சொல்தொடுத்துப் பச்சைத் தோகை எனக்கிட்ட தூய்முத்தம் மறவேன். காயும் உளத்தைக் கனிவிக்க, ஊறும் கள்ள வடித்துக் கனியிதழில் வைத்தே ஈயும்ஒரு முத்தம் எனக்கிறுக்கன் ஆக்கும் எண்ணம் இனிமேல் எனக்கவள்மேல் ஆக்கும். மணம் வீசும் கனியுதட்டால் மங்கை யவள் களிப்புளத்தால் மணமெனவே இசைத்துவந்து மகிழ்வுறவே தளிர்க் கரத்தால் . கணவ னெனக் கட்டிமுத்தம் கனிந்தினிதே யிட்டுவக்கும் அணங்கினையே இன்பத்திற்கிங்கு ஆணிவேராம் என்னலாமே!