பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 157 இல்லம் விரைந்தேன் பச்சைப் பசும்புல் தரை தனிலே-நான் படுத்தேன் எதிரிலே வானழகி மெச்சத் தகுந்த விதத்தினிலே-தன் மேனி மினுக்கி நகைத்திருந்தாள்! மெல்லப் புறவொன்று பெட்டையினைத்-தன் மீதில் இன்பத்தைப் பொழிகெனவே சொல்லி யணைத்தது மரக்கிளையில்-நான் சொக்கிக் கிடந்தேன் தரைதனிலே! மல்லிகைப் பந்தல் மணமிழைக்கும்-அதை மாநில மெங்கும் பரப்பிவரச் சில்லென்று தென்றல் புறப்படுமே-கண்டு சிரிப்பளே மல்லிகைப் பூவழகி இத்தனை காட்சியும் கண்டவுடன்-மிக என்றன் உடலத்தில் வேட்கை வந்து சித்தம் கலைத்தது நானெழுந்தேன்-உடன் சீக்கிரம் வீட்டினைத் தேடிவந்தேன்!