பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I58 தாச்சியப்பன் திருமண வாழ்த்து வாழ்க வாழ்கவே! வாழ்க வாழ்கவே! இன்று முதல் இவர் ஒன்ருய் விட்டார்!-இவர் என்று மினி நளிை நன்ருய் வாழ்க! வாழ்க வாழ்கவே! தனித்து வாழ்தல் இவரே மறுத்தார் இனித்தம் உளமே ஒன்ருய் இணத்தார் பணித்த மலர்வாய், கருத்த கூந்தல், இனித்த சொல், அடல் ஏருெடு சேர்ந்து வாழ்க வாழ்கவே! நறுமலர் மணம்கமழ் கின்றது பாரீர்! உறவினர் மகிழ்ந்திடும் வாழ்த்தொலி கேளிர் அறமுள வழியிவர் இனி நடந் திடுவார் புறவுவான் பறப்பது போல்மிக மகிழ்வார்! வாழ்க வாழ்கவே! மைந்தர் நலமும் உறவினர் நலமும் செந்தமிழ் நாட்டிற் பிறந்தவர் நலமும் இந்த உலகத் தெல்லவர் நலமும் எய்தத் தகுபனி இவரினிப் புரிவார் வாழ்க வாழ்கவே!