பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 19 இவ்விருத்தம் கவிதை யோட்டத்தையும் காட்டிச் செல் கிறது. ஆசிரியம், அறுசீர் எண்சீர் ஆசிரிய விருத்தங்கள், வெண்பா, சிந்துப் பாடல்கள், இசைப் பாடல்கள் எனப் பலவகை யாப்புகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள், எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம் பரவலாக இடம் பெற்றுள்ளன. எனினும் வெண்பா இயல்பாக எளிதாகக் கைவந்திருப்பது தனித்துச் சுட்டத்தக்கதாம். இத்தொகுப்பில், குடிப்பாட்டும் (35), திணிப்பர் (69), பனியன் (87), பாவோர் (1), பூவன் (106) முதலிய புதிய சொல்லாட்சிகளையும், இளக்கம் (218), ஒளிவு (18) தம்மாளம் (194), குறப்பயல் (107) சுருக்கு (4.6) துள்ளாட்டம் (278), பையப்பைய (155), பொல்லாப்பு (125), போதலையா (238), வேணமட்டும் (60) முதலிய வழக்குச் சொற்களையும் காண்கிறோம். இதயாசனம் (2) ரசம் (6), சங்கதி (96), சம்பம் (75), தினம் (42) பங்கயம் (2) புள காங்கிதம் (134), லோகத்திலே (44), வாலிபர்கள் (284), விஞ்ஞானம் (28) முதலிய பிறமொழிச் சொற்களும் தென்படுகின்றன. - கற்பனை, பாடலுக்கு அழகூட்டுவனவற்றில் சிறப்பிடம் பெறுவது. பாவலரின் கற்பனை யாற்றலைப் பல பாடல்கள் (87, 90, 98, 206, 241...) புலப்படுத்துகின்றன. இரவில் ஒளிவிடும் விண்மீன்கள் பகலில் தெரிவதில்லை. அவை ஒளிந்து கொள்கின்றனவாம். அதற்குக் காரணமென்ன? "கதிரவன் வரவு கண்டு காரிருள் போன பின்னர் உதிர்த்திடா வெண்முத் தென்ன ஒளிரும்விண் மீன்களெல்லாம் மதிக்கவே செய்யா ரிந்த மான்விழிப் பெண்க ளென்றே