பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 159 திருமணக் காட்சி மாவிலை தோரணம் மணமிது காண யாவரும் வருகென அழைத்தே நிற்க பூவுங் கொழுந்தும் பூவையர் குடித் தூவிய பன்னிர்த் துளியிற் களிக்க, துள்ளும் மகிழ்ச்சியில் தூய்மை தங்க உள்ளமு மன்பும் ஒன்ருய் மருவத் தெள்ளிய மனத்துத் தேன்மொழி யிவளும், அள்ளியே அன்பை அவளிடம் ஈந்திடக் கருதிப் போந்த காளை யிவனும் திருமணம் காணும் திருநா ளின்றே திருவளர் செந்தமிழ் நாட்டவர் எல்லாம் திருமணம் காணத் திரண்டனர் ஒருங்கே! அத்தனை அன்பையும் இத்தமிழ்ச் செம்மல் சித்தம் தேக்கிப் புத்தம் புதிய இத்திரு நாளில் மெய்த்துணை நங்கைக் கெத்தனை வகையில் வைத்துமகிழ் கின்ருன்.