பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நாச்சியப்பன் மாலையாய்ச் சூடி மகிழ்ச்சிகொள் கின்ருன் காலை இளங்கதிர் கண்சிவந்து நான வேலை யொத்த விழிஒளி மங்கை பாலைப் பொழிந்து பனிமலர்ச் சிரிப்பைக் காளைக் கீந்து களிகொள் கின்ருள். நாளுக்கு நாளே நாமிரு பேரும் வேளைக்கு வேளை விருந்துவடித் துண்போம் பாளைக்கு நிகர்த்த பல்வரி தோன்றப் பாவை மொழிந்த பாட்டிது, கண்ணுல் ஆவி கவர்ந்தனள்! அவன்தன் கண்ணுல் துாவிய மலரே! துவள் கொடி தளிரே! ஒவிய நிகர்த்த ஒண்டொடி! கேளாய்! இருவரும் திருமணம் புரிந்தன மினிமேல் வருகிற நாளெலா திருநா ளென்ருன் ஒருமன தாகி உவந்தனர் இனிமேல் பெரு மனதாகிப் பேரின் பார்ந்து மழலே பேசும் மக்களைப் பெற்றுக் குழைந்த அன்பிற் குழந்தைகள் பேச விழைந்த மனமுடை யாராய் வளம்பல கெழுமி வாழ்க வாழ்கவே!