பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நாச்சியப்பன் புன்னகையைச் சிந்துகின்ற போதினிலும், தண்டையிட்ட பொற்காலால் உதைக்கின்ற போதினிலும், கைவிரலைச் சின்னமலர் வாய் சுவைத்துச் சிரிக்கையிலும், தவழ்ந்துமடி சேர்கையிலும் இன்புறுத்தும் செல்வமிகப் பெருகிடவே! இல்லறத்தில் வளர்ந்தோங்கி ஈருடலும் ஒன்ருகி எய்துகின்ற உயிர்ப்பினிலே இன்பமுற்றுப் பிள்ளைபெற்றே நல்லறத்தார் வாழியென்று நாடெங்கும் புகழ்ந்தேத்த நாள்வளர்க்கும் முதுமையிலும் நன்மை பெற்று வாழியவே! பொங்கும் இளம்பருவம் பூக்கும் கனவெல்லாம் தங்கிச் செழிப்படையத் தாம்விரும்பி-மங்கலமாய் ஆட வனுக்கோர் அழகுமிலர்ப் பூங்கொடியைத் தேடிப் பிடித்துத் திருமணத்தால்-கூட்டவைத்து வாழ்க்கை தொடங்குவதை வாடிக்கை யாக்கிவைத்த மாக்கிழவர் முன்னேர் மலரடியில்-சேர்க்கின்றேன் என்றன் வணக்கத்தை இங்கு மணங்கமழும் மன்றலுற்று நெஞ்சில் மகிழ்வேற-நின்றிருக்கும் மாப்பிளேயும் பெண்ணும் மனமொத்து வாழ்வதற்கே ஏற்புடைய இல்லறத்தின் ஏற்றத்தைப் - பாப்புனைந்து கூறவந்தேன்: இங்குக் குழுமி யிருப்போரே வீறு மொழியால் விளக்குங்கால்-மாறுபட்டுத்