பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 163 . தோன்றும் கருத்தெல்லாம் தோதில்லே என்ருலும் ஊன்றிக் கவனித்தால் உண்மையென்று-தான்புரியும் குத்துகின்ற முள்ளெனவே கூறும் கருத்துதனைச் சித்தத்தால் ஆராய்ந்தால் தேனென்றே-புத்தி தெளிவாகும் அஞ்சாமல் செந்தமிழில் சொல்லும் மொழியறிந்தால் இன்ப முடிவாம்-தெளிவற்ற முன்னேர் வழக்கத்து மூடக் கருத்தெல்லாம் பின்னேரும் தாம்தொடர்ந்து பின்பற்றும்-தன்மையினால் எந்நாட்டும் முன்னேற்றம் ஏறிவர நம்முடைய தென்னுட்டிற் பிற்போக்கே சேர்ந்திருக்க-முன்ளுேடும், வேற்ருர்முன் நம்தலைகள் வெட்கிக் குனிகின்ற மாற்றத்தைக் கண்டு மனம்துடித்தேன்-போற்றியவர் பாராட்டும் வண்ணம் பழந்தமிழர் பெற்றிருந்த சீராட்சி யிங்குத் திரும்பிவர-நேரான பாதை நடப்போம்; பகுத்தறிவுக் கொள்கையெலாம் சாதிக்கும் உள்ளம் தனப்பெறுவோம்-மேதைகளாய் மாறிச் சிறப்படைவோம்: வாழ்வில் மடமையென ஊறிக் கிடக்கும் உளைச்சேற்றைத் தூறெடுப்போம் இல்லறமே நல்லறமாய் ஏற்றுக் களிப்படைவோம் நல்லோர்கள் வாழ்த்த நயந்து!