பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நாச்சியப்பன் எதிர்பார்க்கும் இன்பத்தை ஏந்து தற்கே எய்துகின்ற துன்பமெல்லாம் பொறுத்தி ருந்து புதுப்புனலாய், எழில்மலராய்த் தோன்றி நெஞ்சம் பூரிக்க வைக்கின்ற மகவைக் கண்டு நிதிபெற்ற புலவன்போல் மகிழும் அன்னை நினைப்பினிலே இன்பம்தான் ஊற்றெடுக்கக் குதித்தோமே அன்றுமுதல் அன்னைக் கென்றும் குழந்தையென நின்ருலும் வளர்ந்து வந்தோம்! பள்ளியிலே ஆசிரியர் பாடம் சொல்லப் பாவலனுய் மாறுமொரு வளர்ச்சி பெற்ருேம் துள்ளியதும் குதித்ததுவும் சுட்டி யென்ற துற்றுதலைப் பெற்றதுவும் நினைத்துப் பார்த்தால் உள்ளமெலாம் குறுகுறுக்கும் இன்பம் தோன்றும் ஊமையைப்போல் நாகரிக உலகில் இன்று கள்ள உளத் தைமறைத்துப் பேசும் போது கணக்கெடுத்துச் சொல்வழங்குந் துன்பம் போகும்! துறந்தவர்போல் பிறர்எதிரில் பேசி லுைம் துணைவியவள் தனித்திருக்க நேரும் போது மறந்திடுவோம் வளர்ச்சியினைச் சிறுவ ராகி மங்கையொடு விளையாடத் தொடங்கி நிற்போம்! சிறந்திருக்கும் நாணத்தால் தலைகு னிந்தால் சிறுகுறும்பு பெரிதாகும்! இன்பம் சேர்க்கும்! அறந்தருமோர் இன்பத்தை வெல்லும் இன்பம் அழகியுடன் விளையாடும் இன்ப மென்பேன்! விளையாடத் துணையாகி இன்பம் சேர்த்து வேடிக்கைப் பேச்சாலே துன்பம் போக்கிக் களேயாமல் அன்பனுக்குப் பணிகள் செய்து கதைபேசும் மனையாட்டி, இன்பப் பாவை!