பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 165 வளையாடக் கைவிசி நடந்து செல்வாள் வரும்போதும் போம்போதும் மிஞ்சி பேசும்! களையான திருமுகத்தில் பொட்டு வைத்துக் காட்சிதரும் மனைவிளக்கு கலைக்கண் காட்சி! கைமணக்கும்; கைவைத்த பொருள்ம ணக்கும் களைந்துவைத்த புத்தரிசி தான்ம ணக்கும்; செய்துவைத்த காய்கறிகள் தாம்ம ணக்கும்; சிற்றிலையின் சோற்றினிலே நெய்ம ணக்கும்; மெய்மணக்கும்; பொன்னுடலில் ஒட்டியுள்ள மேலாடை தான்மணக்கும்; முடிம ணக்கும்! கொய்துவைத்த பூமணக்கும்; கோதை நெஞ்சில் குடியிருக்கும் மணவாளன் உளம்ம ணக்கும்! இருகண்ணும் பார்க்கின்ற பொருளு மொன்றே இரண்டுடலும் சேர்கின்ற உயிர்ப்பும் ஒன்றே பெருகிவரும் மழைநீரின் வாய்க்கால் ஒன்றே பெறுமின்பம் அனைத்துக்கும் இல்லம் ஒன்றே வருகின்ற பெருமக்கள் வாயி லெல்லாம் வழங்குகின்ற வாழ்த்தொலியும் ஒன்றே ஒன்றே திருமணத்தால் சேர்கின்ற இல்ல றத்தில் தினந்தினமும் பெருக்கெடுக்கும் இன்ப மொன்றே கற்புடைய மனைவியுடன் ஒழுக்க மொன்றே கற்றிருக்கும் மணவாளன் சேர்ந்தி ருக்கும் பொற்புடைய இல்லறத்தைப் போலே இன்பம் பூவுலகில் எங்கனுமே இல்லை என்பேன். கற்பனைக்கும் அப்பாலே இருப்ப தாகக் காட்டுகின்ற உலகத்தும் காதல் என்னும் அற்புதமாம் இன்பத்தைப் படைப்ப தற்கே யாராலும் முடியாதென் றுறுதி சொல்வேன்!