பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நாச்சியப்பன் ஒத்திருக்கும் இளம்பருவம் காதல் நெஞ்சம் உடையவர்கள் மணமக்கள் என்ருல் அன்பு வைத்திருக்கும் மனத்தின்பம் வளர்ந்தி ருக்கும் வாழ்க்கையிலே நிலைத்திருக்கும் ஒருமை யெண்ணம் சத்திருக்கும் பழம்போலே; உரமி ருந்தால் தழைத்திருக்கும் செடிபோலே இல்ல றத்தில் ஒத்திருக்கும் மனப்பான்மை குடியி ருந்தால் உயர்ந்திருக்கும் குடித்தனமும்! வாழ்க்கை வெல்லும்! இன்புற்று வாழ்கின்ற இல்ல றத்தில் எய்துகின்ற துணைநலத்தால் மக்கள் பெற்றே அன்புடைமை விருந்தோம்பல் இன்சொற் கூறல் அயலவர்கள் செய்ந்நன்றி யறிதல், என்றும் நின்றிடுதல் நடுநிலையில் அடக்கங் கொள்ளல் நெறியொழுகல் பொறையுடைமை அழுக்கா ருமை என்றுந் தீ வினையச்சம் இவற்றைக் கொண்டே ஏற்றபுகழ் பெற்றிருக்க வேண்டும் நன்றே! இளம்பருவக் கனவெல்லாம் எய்தி நல்ல இன்பத்தைத் துய்ப்பதற்குக் காத்தி ருக்கும் உளம்படைத்த கட்டழகி வண்ணத் தோளில் ஒன்றவரும் ஆணழகன் இருவர் தாமும் களமடைந்த வீரரெனத் துடித்தி ருப்பார் காதலெனும் போரினிலே வெற்றி காண இளந்தென்றல் முழுநிலவு மணப்ப டுக்கை இரவு வரும் நேரத்தை எண்ணி யெண்ணி! ஆசையுடன் மாப்பிள்ளை கனவு காண அவர்பெற்ருேர் எண்ணமெல்லாம் பொருளைப் பார்க்கும் வாய்சிவந்த பெண்ணுக்குச் செய்தி ருக்கும் வைர நகை தங்கநகை குறைச்ச வின்றிப்