பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

um Léoér 167 பேசிவைத்த சீர்வரிசை அனைத்தும் தந்து பெண்சாமான் அடுக்கிவைத்த கோலம் பார்த்துக் காசுபணம் ரொக்கமுடன் மாமி சாமான் கணவரிசை சரிபார்த்துக் கணக்குப் பார்ப்பார். கைபிடித்த கணவனுடன் மங்கை சென்று கலகலெனச் சிரித்திருந்து பேசி விட்டால் மைவைத்துப் பிடிக்கின்ருள்: மயக்கு கின்ருள்: மாபெரிய கைகாரி என்று சொல்வார், பெய்திருக்கும் அன்புடையாள் மீது கொண்ட பெருங்காதல் மணவாளன் வேறு பெண்ணே எய்து தற்கு தினையானென் றுணர்ந்து கொண்டால் இவள்மயக்கம் நன்றென்று தெரிய லாகும்! இல்ல்றத்தின் வெற்றிக்குத் தமிழர் நாட்டில் - எதிரியென நிற்பவர்கள் மாமி நாத்தி சொல்லுகின்றேன் என நினைத்துக் கோபம் கொண்டு துாற்ருதீர்! நிகழ்வதையே சொல்லு கின்றேன்! புல்லெனினும் கணவனையே பொருளாய்க் கொண்டு புகுந்துவிட்ட மருமகளை ஏசி நின்ருல் நல்லவளின் மலருள்ளம் கசங்கிப் போகும் நங்கையிடம் மகன்பார்க்கும் இன்பம் போகும்! உயிரிலொரு பாதியென இருக்கும் பெண்ணின் உளம்வாடப் பொறுப்பதுண்டோ கணவன் உள்ளம் பயிரில் ஒரு புறம்பூச்சி யரித்து விட்டால் பாழாகிப் போகாதோ வயல்கள் முற்றும் அயராமல் பெற்றெடுத்து வளர்த்து விட்ட அன்னைக்குப் பயப்பட்டு மனைவி தன்னைத் துயர்ப்படுத்தும் கணவைெரு கோழை என்பேன் துணைவிநலம் காப்பவனே வீர னென்பேன்!