பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நாச்சியப்பன் பெற்றெடுத்த தாயைத்தான் போற்ற வேண்டும் பிழையில்லை உயர்வேயாம் ஒப்பு கின்றேன் குற்றேவல் செய்யுமொரு பெண்ணிற் கீழாய்க் கொடுமையுற மருமகளே நடத்து கின்ற சிற்றறிவு தாய்க்கிருந்தால் திருத்த வேண்டும் சேயிழைக்குத் துணையாக இருக்க வேண்டும் பெற்றெடுத்த தாயேனும் பெண்டாட் டிக்குப் பெருந்துன்பம் தருவாரேல் எதிர்க்க வேண்டும். கட்டிவைத்த மனைவியையே வீட்டில் வைத்துக் கடல்கடந்து பொருள் திரட்டச் செல்லு கின்ற கெட்டவொரு பழக்கத்தால் ஆண்க ளெல்லாம் கெட்டுவிட்டார்! பெண்களுக்கும் இன்ப மில்லை! வட்டிக்கு வட்டியெனப் பொருள்பெ ருக்கி வாழ்ந்தவர்கள் சொத்தெல்லாம் வைப்புக் காச்சு! தொட்டுவிட்ட மனைவிதனைத் தனியில் வைத்துத் தொலைபோகும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்! கணவனெரு பாதியெனில் மனைவி பாதி காணுகின்ற இல்லறத்தின் ஒழுங்கு நீதி மணவாழ்க்கை வெற்றிபெற வேண்டு மால்ை மனத்தாலே இருவரும்தாம் ஒருமை யாகிக் கணந்தோறும் ஒருவர் நலம் ஒருவர் கண்டு கண்டவர்கள் புகழ்ந்தேத்தும் நிலையில் நின்று குணமொத்து மனமொத்துக் குடித்த னத்தில் கூடியிருந் தாடிநலம் பாடி வாழ்க! கழுத்துக்குத் தாலியிட்ட கணவ ைேடு கைப்பிடித்து நடப்பதற்குக் கூசு கின்ற பழுத்திருக்கும் மாங்கனியைப் போன்ற பெண்கள் படைதிரண்டு கோயில்குளம் தீர்த்த மென்று