பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாச்சியப்பன் அதிர்ந்துபோய் ஒளியும் காட்சி அதிசயம் பாராய் தம்பி!" (88-89) மாறும் முடி’ (98) எனும் பாடலில் ஞாயிற்றை மன்னரணியும் முடியாகக் கற்பனை செய்திருப்பது நோக்கத் தக்கது. இன்றைய தமிழனை மயங்காதே மறவாதே சீறிப் பாய்வாய்' என வேண்டுகோன் விடுக்கும் பாவலர்: அவனைக் காலில் கழலணிந்தவனாகவே கொண்டு, செறிகழற்றான் மிகவொலிப்பச் சீறிப் பாய்ந்து சிங்கமென முழக்கிடுவாய் ஆர்ப்பரித்தே! (18) எனப் பாடுவதும், வேத காலத்திற்குத் திரும்பும் ஆரிய சமாசப் போக்கில், “பாராட்டும் வண்ணம் பழந்தமிழர் பெற்றிருந்த சீராட்சி யிங்குத் திரும்பிவர-நேரான பாதை நடப்போம்...”* (163) எனச் குரல் கொடுப்பதும் பாவலரின் அற்றைநாட் பழமை இறுக்கத்தைக் காட்டுகின்றன. ‘அகவன் மகளே...எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் (23) ஒசை யமைப்பைப் பாடுக வண்டே’ (102) எதிரொலிக்கின்றது. முகிலை யானைக் கூட்டமாகப் பாவலர் காண்பதும் (91), 'துஞ்சுபுலி இடறிய குருடன் போலே வஞ்சகரின் இந்தியொடு வந்து விழுந்தார்’ (67) எனும் பகுதியும் புறநானூற்றுப் பாடல்களை (369, 73) நினைவூட்டுகின்றன. குறட்கருத்துகள் சில இடங்களில் (120......) விளக்கம் பெறுகின்றன. குழந்தைப் பாடல்கள் நிரம்ப எழுதிய பாவலர் கவிமணியிலும் தோய்ந்தவர் என்பதைக் குறிப்புகள் (97) வெளிப்படையாக்குகின்றது. 'தவிப்பதற்கோபிள்ளை' எனும் கண்ணதாசனின் குரலை,