பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 169 கொழுத்துப்போய் ஊர்சுற்றித் திரிந்தி ருப்பார் . கொண்டவனே தெய்வமெனக் கொள்ள மாட்டார் அழுத்தமுள்ள வடசொல்லின் தருப்பைப் புல்லர் அடிவணங்கிப் படியளப்பார் வெட்கம்! வெட்கம்! ஊர்க்கதைகள் பேசுவதும், பொழுது போக உறவினரை ஏசுவதும் சண்டை யிட்டுச் சீர்பெருகும் நன்னாளில் கூட்டு விட்டுச் சினம்பெருக்கி வாழ்வதுவும், குறையை எண்ணி தேர்மையின்றி நடப்பதுவும் வாழ்வில் என்றும் நிகழ்கின்ற தொடர்கதையாய்ப் போன தையா! சீர்திருந்தும் மனப்பான்மை, அறிவுக் கொள்கை தினம் பரவி நம்நாடு திருந்த வேண்டும்! எங்கிருந்த போதினிலும் கணவ ைேடே இருப்பதற்கு மனைவிக்கும் உரிமை யுண்டு. வங்கத்துக் கடல்கடந்து போகும் போதும் வழித்துணையும் வாணிபத்தில் துணையும் செய்யப் பங்கிருக்க வேண்டுமன்பு மனைவியாட் டிக்குப் பலநாட்டு நாகரிகம் தெரிய வேண்டும் மங்கையுடன் சேர்ந்திருக்கும் ஆட வர்க்கே மற்ருெருத்தி தனை நினைக்கும் நிலைமை யில்லை! செங்கனிவாய் இதழ்துடிக்க இரவு நேரம் சிற்றறைக்கும் அடுக்களைக்கும் சென்று சென்று தன்கணவன் வருகைக்குக் காத்தி ருந்து தையலவள் கண்ணிரண்டும் பூத்து நிற்கப் பொங்கிவரும் இளம்பருவ சுகத்தைக் காணப் பொருத்தமுள்ள காலத்தை மறந்து விட்டே எங்கிருந்தோ சீட்டாடிப் பணமி ழந்தே ஏமாறும் கோமாளிக் கென்ன சொல்வேன்!