பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தாச்சியப்பன் ஒருத்தியுடன் ஒருவனுறும் மகிழ்வை யெண்ணின் உலகத்தில் அதுபோல வேருென் றில்லை. பொருத்தமுள்ள மனைவிதனை விட்டு விட்டுப் பூவுலகிற் பிறமாதர் நாட்டங் கொண்டோன் வருத்தமுற்றுப் பிணியுற்று வாட நேரும் வாழ்வினிலே தீராத துன்பம் சேரும் கருத்துடனே நலந்தேடும் மனைவி தன்னைக் கண்போலக் கருதுபவன் நலம்சிறக்கும்! உடல்தளர்ந்து முதுமையுற்றுக் கிழவி யாகி உடனிருக்கும் மனைவிக்கும் உள்ளம் உண்டு நடப்பதற்கும் முடியாது படுக்கை மீது நலிவடைந்து கிடக்கின்ற போதும் அன்புத் தொடர்பிருக்கும் மணவாளன் அருகி ருக்கும் தூயநினைப் பெழும்போது மனங்க ளிக்கும் கடற்கரையும் முழுநிலவும் தென்றல் காற்றும் கருத்தினிலே புகுந்தின்பம் மிகுத்துக் காட்டும்! நல்லறிவுக் கொள்கையுள்ள தேனப் பர்க்கும் நங்கையுண்ணு மலைக்குமிங்கு நடத்தி வைக்கும் சொல்லரிய அழகுமண விழாவின் போது துள்ளிவரும் இன்பத்தால் மனந்து ளும்ப நல்ல தொரு செந்தமிழில் கவிவ டித்து - நாச்சியப்பன் வாழ்த்துகின்றேன் அன்பு மக்காள் இல்லறத்தைத் தொடங்குகின்றீர் வெற்றி சேர்க என்றென்றும் இன்புற்று வாழ்க நன்றே!