பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 171 ஈடில்லா இன்பம் காணுத போதெல்லாம் உள்ள ரங்கில் காட்சிதந்தே ஆடுகின்ருள்; காணும் போதோ வீனகத் தன்னருகில் இழுக்கின் ருளே! வெட்கமின்றி தானிழுத்தேன் கையை என்று பூணுத பழியென்மேல் பூட்டு கின்ருள் புரியாமல் சொல்கின்ருள் அதன. லென்ன? காணுத இன்பத்தைக் காணு கின்றேன் கவின் வாழ்வு பெறுகின்றேன் மகிழ்கின் றேனே! நடக்குங்கால் எழுகின்ற சதங்கைப் பேச்சும் நவிலுங்கால் எழுகின்ற தமிழின் பேச்சும் அடிக்கடிதாம் போட்டியிடும்; வழக்கு நீளும்! அதற்குள்ளே சிரிப்பொன்று குறுக்கில் வந்தே முடிக்காதே நாளுெருவன் இங்குண் டென்று முழக்கிடுமாம்; நெறித்தலைவன் என்றன் நெஞ்சோ, கிடக்கட்டும் இவையெல்லாம் என்று கூறிக் கீழ்க்கடையில் புருப்பறக்கும் விழியைத் தாவும்! தென்றல்வரும் பசுஞ்சோலை தன்னில் முல்லை சேர்க்கின்ற பேரழகு பெருகு மேனும் மின்னிமின்னி விண்மீன்கள் வானந் தன்னில் விடியுமட்டும் பேரொளியை எழுப்பு மேனும் பொன்வார்த்த மேனியிலே தோன்றித் தோன்றிப் புத்துணர்வை எழுப்புகின்ற அழகின் பாய்ச்சல், என் கண்கள் தமைவந்து மோதுங் காலை எழுமின்பக் காட்சிக்கோர் ஈடில் லையே!