பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நாச்சியப்பன் மாங்குயில்கள் கூவிடுமோர் ஒலியி லேனும் மகரயாழ் மீட்டவரும் இசையி லேனும் பாங்கிருக்கும் மேடையிலே அமர்ந்து பாணன் பக்கத்துக் கருவியெலாம் முழக்கும் போது தீங்கவிதை செந்தமிழிற் பாடி, என்றன் செவிகுளிர எழுப்புகின்ற பண்ணி லேனும் நான்கேட்க மென்மொழியால் அவள் எ ழுப்பும் நாதத்திற் கீடான இன்ப மில்லை! காற்ருடி சுற்றுங்கால் மேல்எ ழும்பும் காற்றுவந்தென் உடல்குளிரத் தழுவும் போதும் கோற்ருெடியார் பலர்கூடிப் பறித்து வந்து கொட்டிவைக்கப் பூக்காரன் கட்டி வைத்த நாற்றமலர் மாலையிரு தோளும் மார்பும் நலமடையக் குளிரடையப் புரளும் போதும் மாற்றுடையோ டிரவினிலே அவள்வந் தென்றன் மனங்குளிரத் தழுவிடுமோர் இன்ப மில்லை! சோற்றினிலே நெய்மணக்கும்; குடிக்கும் தண்ணிர்ப் பானையிலே நன்னரி வேர்ம ணக்கும்; காற்றினிலே பூமணக்கும்; பையில் வைத்த கைக்குட்டை யிலே அத்தர் தான்ம ணக்கும்: போற்றிசெய்யும் கோயிலிலே சாம்பி ராணிப் புகைமணக்கும் என்ருலும் மிகம ணக்கும் நாற்றமலர் அவள்மேனி நுகரும் இன்பம் நல்லின்பம் அதற்கீடு வேறில் லையே! சத்தமிட்டு மலரணைந்து தேன்கு டிக்கும் கருவண்டு தனக்கேனும், மாம்ப முத்தைக் கொத்திவிட்டுப் பறக்கின்ற பச்சை வண்ணக் கிளிக்கேனும், கொத்தடிமை வேலை செய்து