பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ந்ாச்சியப்பன் நிலத்த இன்பம், காதல்! இளித்திருக்கும் காரிருளில் நீல வானில் எழுந்துவரும் பந்தனைய நிலவின் கீழே தனித்திருக்கும் உப்பரிகை மேலே, தென்றல் தழைக்காட்டுப் பூமணத்தை வாரி வீசப் பனித்திருக்கும் செவ்வாயில் முல்லை பூத்துப் படர்ந்துவரும் தளிர்க்கொடியைச் சுற்றி யென்றன் மனத்திருக்கும் ஆசையெலாம் நிறையக் கண்டேன்! மற்றதனைச் சொற்படுத்தும் வகையைக் காணேன்! தணியாத காதலினல் ஒன்ருய்க் கூடித் தனித்திருவர் காணுகின்ற இன்பந் தன்னை அணியாரும் பாவாகக் கதைப்ப தென்ருல் யாராலும் இயலாது; காதல் கொண்டு மணியான சிற்றிடையை வளைத்த பேரும் மனந்திறந்து வாய்திறந்து கூறு தற்குத் துணியாரே, துணிந்தாலும் உலகப் பேச்சில் சொல்லொன்றும் இல்லையெனக் கண்டு கொள்வார்! மாதொருத்தி தனக்கண்டு மயங்கி நின்று மற்றவளின் உளங்கவர்ந்து காதலாகி மோதிவரும் துன்பமெலாம் எதிர்த்து நின்று முன்னேறிக் கைகூடும் இன்பம் கண்டார் பாதியென நின்றஉடல் இரண்டு கூட்டிப் பக்குவமாய் ஒன்ருக்கி உயிரைச் சேர்த்து மேதினியில் தாம்கண்ட சுவையை யெங்கும் வெளிப்படுத்த நினைத்தாலும் தோல்வி காண்பார்!