பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்டல்கள் #75 பருவமெனும் ஒரு நிலையில் நெஞ்ச மென்னும் பாற்குடத்தில் தோன்றுகிற தளும்ப லொத்தே உருவாகும் உணர்ச்சியினல் உந்தப் பட்டே உண்டாகும் காதலினை விளக்க லாமோ? உருவான எழிலோடு வருவா ளான ஒருமடந்தை நெஞ்சாரக் காத லிக்கும் திருவாளர் மலைத்தோளிற் சேரும் போது தீம்பாலால் நிறைந்தகுட மாகும் காதல்! மோதிவரும் கடலலைகள் போல நெஞ்சில் முன்னேறும் உணர்ச்சியிலே ஆசை பொங்கும்! பாதியிலே மலைபோலே எழும்பி வந்த பச்சையலை கரைமீதே மோதி வீழும் காதலிலே பொங்கியெழும் நெஞ்சத் தானும் கட்டழகி யொருத்தி கடைக் கண்ணின் பார்வை மோதியபின் அவளடியில் வீழ்ந்தி ருப்பான்! மொய்குழலாள் ஆதரித்தால் உயிர்பி ழைப்பான்! கிணற்றடியில் பூத்திருக்கும் மல்லி கைக்கும் கேடுவரப் பொறுக்காத உள்ளங் கொண்டாள் மணற்கரையில் தன்மடியில் படுத்துக் காதல் மணங்கொண்டான் ஒருதுன்ப மடையக் கண்டால் தணற்புழுவாய்த் துடித்திடுவாள் காப்ப தற்குத் தக்கபல அருஞ்செயல்கள் முயன்று செய்வாள் எணற்கரிய இன்பமடா காதல் இன்பம்! ஈருயிரும் ஒன்ருகி இயங்கு மின்பம்! நள்ளிரவில் மின்னுகின்ற விண்ணின் மீன்கள் நாடெல்லாம் ஒளிபரப்பும் நிலவு மங்கை கள்ளரிவர் பாராமல் வீட்டி னுள்ளே கட்டிலறை யுள்ளடைந்து விளக்க ணேத்துக்