பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 1ול குறள் நெறிக் குடும்பம் அவை யேற்றம் தென்றலுக்கு மணஞ்சேர்க்கும் பூவைப் போலே திரைப்படத்திற் சுவைகூட்டும் பாட்ட ளிப்போன் இன்றுகுறட் கவியரங்கம் தன்னில் வந்த இசைக்கவிஞன் செந்தமிழன் கண்ண தாசன் நன்றினிது தலைமைபெற்று வீற்றி ருக்க நாட்டினரே திருக்குறளின் தலைவன் சீரை மன்றேறிப் பாடுகின்றேன் வணக்கம்! அன்பு மனங்கவரும் தமிழ்க்கவிதை கேட்பீர் கேட்பீர்! தலைவன் தோல்சிவந்த மேனிகொண்ட பெண்ணுெ ருத்தி தோன்றிவரக் கண்டவுடன் காளை யர்தாம் மால்படிந்த உளத்தினராய்ச் சுற்றி வந்து மனத்தினிலே இலக்கியத்தில் வரும்த லைவர் போல்நினைத்துக் கொண்டிடுவார்; காதல் சீட்டுப் போக்கிடுவார்; தனியிடத்தைத் தேடி நிற்பார் சேல்நிகர்த்த விழியாளேக் கண்டு தெஞ்சத் தேன்குடத்துக் கற்பனையை வடித்து வைப்பார்! அன்னவிளின் செந்நிறத்தை மங்கச் செய்யும் அழகுநிறம் கொண்டவளாய் இன்ளுெ ருத்தி தன்னெதிரில் வரக்கண்ட கணமே நெஞ்சம் தாவிமரக் கிளேமாறும் மந்தி போல முன்னவளை மறந்துவிட்டுப் புதிய பெண்ணின் முன்சென்று தின்றேங்கும்; காதல் சீட்டும் பின்தொடரும்; தனியிடத்தை நாடும்; காதல் பிறிதொருத்தி வரும்வரைக்கும் நிலைத்தி ருக்கும்! நா-12