பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நாச்சியப்பன் கோவையிலே ஒருபெண்ணைக் காத லித்துக் கூடலிலே ஒருத்தியுடன் மணப மு. டித்துத் தேவையுள்ள போதெல்லாம் வேறு வேறு தேடுகின்ருர் சில தலைவர் இந்த நாளில்! காவியத்து நாயகரின் மேன்மை பற்றிக் கழகத்துக் கூட்டத்தும், பத்தி ரிக்கை ஒவியத்தும் காண்பதன்றித் தலைவர் என்போர் உள்ளத்தில் நடைமுறையில் காணற் கில்லை. எழுச்சியுறும் பருவத்துப் பசியைத் தீர்த்தும் இன்முகத்தில் மலர்ச்சிரிப்பை விரித்தும், தேனைக் குழைத்துவைத்த இன்சொல்லால் குளிர வைத்தும் கொஞ்சிவிளை யாடியின்ப முத்தம் தந்தும் அழைத்திருந்த போதெல்லாம் தனித்து வந்தே அன்புமழை பொழிந்திருந்த அழகை: இன்பந் தழைத்திருக்கும் பூக்காட்டைத் தவிக்க விட்டுத் தான்வாழ நினைப்பவனும் மனித ேைமா? அன்றன்று பூத்துவிழும் மலர்கள் போல அவதாரம் எடுத்துவரும் காதல் தானும் அன்றன்றே விழுந்துவிடும் என்ற சேதி அறியாமல் தற்காத்து நெறிநில் லாமல் நின்றபழி தீர்வதற்கு நஞ்சு தின்றும் நிறைகுளத்தில் பெருங்கடலில் கிணற்றில் வீழ்ந்தும் சென்ருெழிந்த மாதர்பலர் அந்தோ அந்தோ திருக்குறளின் நெறியுணர்ந்தால் தீமை யுண்டோ? திருக்குறளின் நெறித்தலைவன் காத வித்த சேயிழையாள் தனைப்பிரிய நினைப்ப தில்லை! உருக்கொண்ட காதலெனும் தீயைப் பற்றி டிரைக்கின்ற தத்துவத்தின் விளக்கம் காணிர்;