பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 21 "ஏன் பிறந்தாய் (116) பாடலில் இன்னொரு வகையில் கேட் கின்றோம். எனினும், பாரதி, பாரதிதாசன் ஆகிய இரு வரிடமே பாவலருக்கு மிகுந்த ஈடுபாடு என்பதனை இத் தொகுப்பு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. பாரதியின் வாழிய செந்தமிழ்’ அமைப்பை அப்படியே தழுவி, 'வாழிய தமிழ்மொழி வாழிய தமிழ்க்குடி வாழிய தமிழ்த்திரு நாடே!" (27) என நாட்டு வாழ்த்து பாடுகிறார். ஆங்கிலேயனும் ஒரு தேசபக்தனும் எதிரெதிர் உரையாடும் அமைப்பில் வின்சு துரையும், வ.உ.சியும் உரையாடுவதாகப் பாரதி பாடிய இரு பாடல்களைத் தழுவி இந்திக்காரன் தமிழ் நாட்டானிடம் கூறுவது {76), தமிழன் இந்திக்காரனிடம் கூறும் பதில் (77) என இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் முருகு சுப்பிரமணியம் நடத்திய 'பொன்னி’ இதழில் 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் குறிப்புடன் பல பாவலர்கள் நாட்டுக்கு அறிமுகப் படுத்தப் பட்டனர். அவர்களுள் பாவலர் நாரா நாச்சியப்பனும் ஒருவர். பாவேந்தரிடம் இவருக்குள்ள ஈடுபாடு மிகப் பெரிது. என்னாசான் பாவேந்து’ (210) எனத் தம்மை அவர் மாணாக்கராக்கிக் கொள்வதே இதனைக் காட்டும். இவர் அவரைப் பாடிய பாடல்கள் ஒருபுறமிருக்க, அவர் கையாண்ட தொடர்களையும், அமைப்புகளையும் பலவிடங் களில் பின்பற்றுவதைக் காணலாம். 'சூழ்ச்சிதன்னை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தூள்தூளாய்த் தொலைப்பதற்குத் தொடங்கி விட்டார்’ (56) என்னும் வரிகளும், 'நீலநிற வானில் நிலவெரிக்கும்; அப்பம் போல் கோலமுழு துங்காட்டிக் கொண்டிருக்கும்” (131)