பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் ነፇ9 நெருக்கத்தில் வரும்போது குளிர்ச்சி காட்டி நீங்குகின்ற போதுசுடும் தீயைக் கொண்டாள்! பெருக்கெடுக்கும் அமுதனய தோளும், காதல் பிணிதீர்க்கும் மருந்துமுடை யாளே என்ருன்! மயில்தானே அழகுமகள் தானே இந்த மங்கையென மயங்கியவள் தாக்கும் கண்கள் உயிர்கொல்லும் கூற்றமென உணர்ந்து, கொல்லும் ஒருகளிற்று மதவெறியை நிகர்ப்ப தான உயர்ந்திருக்கும் மார்பகத்தைக் கண்டு நெஞ்சில் உண்டாகும் அச்சத்தால் வலிமை மாறித் துயர்திரக் காதலெனும் மதுக்கு டிக்கத் தோகைகடைக் கண்பார்வைக் கேங்கி நிற்பான்! நோக்குமவள் பார்வையில்ை நோய்வாய்ப் பட்டுஅந் நோயொடுங்கக் கண்களவு கொண்டு நிற்பான் தாக்குமவள் பார்வையிலும் சொல்லி னுள்ளும் தனவிரும்பும் குறிப்புளதோ என்ரு ராய்ந்தே ஏக்கமுடன் பார்த்திருப்பான் புன்சி ரிப்பில் ஏந்திழையாள் கருத்தறிவான்! பாயும் கண்கள் நோக்கொத்த போதிருவர் நெஞ்சத் துள்ளும் நுழைந்துவிடும் காதலுக்குச் சாவே யில்லை! தெய்வீகக் காதலென எதையோ சொல்வார் திருக்குறளில் அதுபற்றிக் கண்ட தில்லை பெய்கின்ற மழைப்புனலும் நிலத்தில் வீழப் பிளவுடைய விதையதுதான் முளைத்தல் போல மைநின்றே எழில்கூட்டும் கண்ணின் பார்வை மழைப்புனல்தான் ஆடவனின் செங்கண் என்னும் செய்நிலத்தில் வீழுங்கால் காதல் என்னும் செடிமுளைக்கும்! அன்பாலே செழிக்கும்! ஓங்கும்!