பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நாச்சியப்பன் ஒத்திருக்கும் பருவத்தார் இருவர் கூட உள்ளத்தில் எழும்பிவரும் உணர்ச்சி யாலே ஒத்தமனம் உடையாராய்த் தங்கள் வாழ்வில் ஒருவருக்கு மற்ருெருவர் உடைமை யாகி நித்தநித்தம் அவருருவும், அன்பும் பண்பும் நினைத்திருக்க நினைத்திருக்க வளரும் காதல்! பித்தர்மொழி தெய்வீகப் பேச்சை நம்பிப் பெருங்காதல் சிறிதென்று வெறுக்க வேண்டாம். தன்னெஞ்சங் கவர்ந்தவளும் ஒருத்தி யேதான்! தன்காதல் அவளொருத்தி யிடத்தி லேதான்! என்றுரைப்பான்! அவளுயர்வைத் தெரிவிக் கின்ருன்! எழிற்பூவும் வான்மதியும் இவளை யொக்கும் என்றுரைக்க முடியாதே; அவையி ரண்டும் எவர்வரினும் முகம்காட்டும்; குவளை நானும் சின்னவிழி மெல்லியலோ என்னை யன்றித் திருமுகத்தைப் பிறர்காணத் தோன்ற மாட்டாள்! தன்னையவள் காதலிக்கும் குறிப்ப றிந்து தாவிவரும் பேரன்பால் ஒன்று சேர்ந்து பின்னையவள் நலங்கூறிக் கொண்ட காதல் பெருஞ்சிறப்பை யெடுத்தெடுத்துக் கூறு கின்ருள்! என்னையுடல் என்றுரைத்தால் உயிரே போல்வாள் எழில்மடந்தை யவள்பிரிந்தால் சாவு நேரும்! என்றுரைத்தான் திருக்குறளின் தலைவன் என்ருல் இதுபோன்ற மெய்க்காதல் எங்கு முண்டோ? மறுவற்ற மதிமுகத்தாள் காதல் கண்டு மன்ந்துணிந்து குறைகூறும் உலக மென்ருல், அறிவற்ற சிலர்போலப் பெற்ருேர் தேடி யளிக்கின்ற ஒருத்தியுடன் வாழ்க்கை காணும்