பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 10] நெறியற்ற போக்கினிலே செல்ல மாட்டான் நீதிசொல்லும் திருக்குறளின் தலைவன் கற்பு நெறிபற்றி வாழ்கின்ற இல்ல றத்தில் நேர்பட்ட காதலியின் தோளே சேர்வான்! தேவைக்குப் பெய்யென்னப் பெய்மழை போல் தெள்ளமுதாய் வாய்த்துவிட்ட காதல் மங்கை சேவைக்கு முந்திடுவாள்; கணவன் சொல்லைச் செவியேற்று நடந்திடுவாள்; கற்பின் மாட்சி யாவர்க்கும் தெரிந்திடவோர் எடுத்துக் காட்டாய் அலங்கரிப்பாள் மனையகத்தை அந்த அன்புப் பூவைக்கு நான்கணவன் எனநி னைத்துப் பூரிக்கும் நெஞ்சுடையான் குறள்த லைவன்! கற்கின்ற போதெல்லாம் அறிவு கூட்டிக் கல்லாத போதிருந்த மடமை காட்டி அற்புதத்தைச் செய்கின்ற கல்வி போலே அழகுடைய காதலியைத் தேடிச் சென்று வெற்பனைய தன்தோளில் அணைக்கும் போது விளைகின்ற இன்பத்தை எண்ணிப் பார்த்து முற்கான இன்பமிதே என்று சொல்லி முறுவலித்துக் குறள்படிப்பான் நற்ற லேவன்! பெற்றவர்க்குப் பெயர்பெற்ற பிள்ளை யாவான் பிள்ளைகளை முன்னேற்றும் தந்தை யாவான் சுற்றத்தார்க் குறவாவான் நட்பி னர்க்குத் துணையாவான் நாட்டினர்க்குத் தொண்ட வைான் கற்றறிந்த மாணவனம் ஆசா னுக்குக் கல்விதரும் கணக்காயன் மாண வர்க்கு! பற்றுவைத்த மனைவிக்கோ தெய்வ மாவான் பண்புடைய தலைவன் நல்ல துணையு மாவான்!