பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நாச்சியப்பன் மனமாரக் காதலித்த ஒருத்தி தன்னை மணந்தின்பம் காணுகின்ற கார ணத்தால் தினத்தினமும் பிறர்வாழப் பொருமை கொண்டு தீயாகத் தன்நெஞ்சை மாய்ப்ப தில்லை. நினைக்கின்ற போதெல்லாம் இன்பஞ் சேர்க்கும் நேரிழையைக் காதலியாய்ப் பெற்ற தாலே தனக்கொல்லும் நோய்வழங்கும் மாத ரோடு தனித்திருக்க நினைப்பதில்லை குறள்த லைவன்! குணக்குன்ருய் ஒருமனைவி வாய்த்த தாலே குறையின்றி வாழ்ந்திருப்பான்; மழலைப் பேச்சில் கணக்கின்றி இன்பத்தைச் சேர்க்கும் பிள்ளைக் கணிகளையும் பெற்றெடுத்தான்; மகிழ்ச்சி பெற்ருன்! மணக்கின்ற தென்றலுக்கும், அடர்ந்தி ருக்கும் மரநிழற்கும். பூத்திருக்கும் மலர்க ளுக்கும் துணைக்கிருக்கும் தலைவிக்குத் துணைவ கைத் தொடர்கின்ருன் தலைவன்.இனி நிறுத்திக் கொள்வோம்!