பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 183 துறந்தோர் காதல் பற்றுவிட்டோம்; துயர்விட்டோம்: காதல் என்னும் பாசத்தை மறந்துவிட்டோம் ஈசன் தாளைப் பற்றிவிட்டோம்; அழியாத இன்பந் தன்னைப் பார்த்துவிட முயல்கின்ருேம்; தவத்தில் நின்றே முற்றிவிட்டோம்! உலகத்தீர், காமச் சேற்றில் முளைத்திருக்கும் ஆம்பலெனக் காய வேண்டாம்! எற்றிவிட்டே துன்பத்தைத் துறவு கொள்வீர்! எந்நாளும் அழியாத இன்பம்! என்பார். முழுமுதலாம் ஒருபொருளை உருவ மாக்கி முடிசூட்டி வைத்தவர்கள், பெண்ணைச் சேர்ந்து தழுவட்டும் என எண்ணித் தேவி மாரைத் தாம்படைத்து விட்டார்கள்: இன்பந் துய்த்தால் எழுபிறவி தனக்காட்ட பிள்ளைப் பேற்றை இறைவர்பெறச் செய்தார்கள்! கோயி லெங்கும் வழிவழியாய் இல்லறத்தைப் படம்பி டித்து வைத்தவர்கள் ஆண்டவனின் பக்தர் கண்டீர்! ஈசனைப்போய் பக்திசெய்யும் அன்ப ரெல்லாம் எப்படிநாம் அவனடியைப் பிடிப்ப தென்று பூசனையாய்த் தொழுகின்ற போதி லெல்லாம் பூனேவந்து பால்காத்த கதையாய் முன்னை வாசனையை மறவாமல் கடவு ளாரை வடிவான மாப்பிள்ளை யாக்கித் தம்மை ஆசையுள்ள காதலியாய்க் கொண்டு பாடல் ஆக்கிடுவார்; பாடிடுவார்: பக்தி செய்வார்!